18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

குடலிறக்க அறுவை சிகிச்சை ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?

இங்குவினல் ஹெர்னியா என்று சொல்லக்கூடிய குடலிறக்கம் பெண்களை விடவும் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த வகை ஹெர்னியா விரைப்பையின் அருகே ஏற்படுவதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா என்ற அச்சம் பொதுவாக எல்லோருக்கும் எழும். இரண்டு விஷயத்தை கூர்ந்து நோக்க வேண்டும். குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் ஆண்களுக்கு குறி விரைப்புத்தன்மையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா? அதாவது ஆண்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறதா? செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் இல்லையென்றாலும், அவர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா? அவர்கள் குழந்தை பெரும் தன்மையை இழக்கிறார்களா? வாருங்கள் பார்ப்போம்.

விரைப்பையும், குடலிறக்கமும்

பல வகை ஹெர்னியா உண்டு என்றாலும், இங்குவினல் ஹெர்னியா வகை குடலிறக்கம் தான் அதிகப்படியாக ஏற்படுவது. இந்த வகை குடலிறக்கம் மொத்தத்தில் 75% என்று தரவுகள் கூறுகின்றன. இங்குவினல் ஹெர்னியா, பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. பெண்களுக்கு வெறும் 10% மட்டுமே இந்த வகை ஹெர்னியா ஏற்படுகிறது. மீதம் 90% ஆண்களுக்கே ஏற்படுகிறது. இந்த விகிதாச்சாரம் இங்குவினல் ஹெர்னியா வகைக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பல வித ஹெர்னியாக்கள் உண்டு. அவை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஆண் குழந்தை பிறப்பதற்கு சற்று முன்னர், அதன் இரண்டு விரையும் மேல் வயிற்றின் உள் பகுதியில் இருந்து இங்குவினல் குழாய் வழியாக விரைப்பைக்குள் இறங்குகின்றன. அப்படி இறங்கும்போது சிறிய துளையை அது விட்டுச்செல்லலாம். இந்த துளை இயற்கையாக மூன்று மாதத்தில் மூடிவிடும். சில சமயங்களில் இது மூடுவதில்லை. இன்னும் சிலருக்கு இந்த துளை மூடிக்கொண்டாலும் சில நேரங்களை வாழ்வின் எந்த சமயத்திலும் திறந்துக்கொள்ளலாம். இந்த துளையின் ஊடாக குடல் பகுதிகள் அழுத்தத்தின் காரணமாக அமுங்கி பிதுங்கினால் இங்குவினல் ஹெர்னியா ஏற்படுகிறது. மருத்துவர் மாறன் சென்னையின் பிரபலமான ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். சில ஆயிரம் ஹெர்னியா அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த நிபுணர் அவர். கீழ்கண்ட காணொளியில் அவர் இங்குவினல் ஹெர்னியா என்று சொல்லக்கூடிய குடலிறக்கம் பற்றி பேசுகிறார்.

இங்குவினல் ஹெர்னியா இருப்பதால் உடலுறவு வைத்துக்கொள்ள முடியுமா, முடியாதா?

செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாமல் போவது என்னும் கூற்று பல காரணிகளால் ஏற்படலாம். ஆண்களின் குறி விறைப்பு தன்மை இல்லாமலோ, விறைப்பு நீடிக்காமல் போனாலோ, செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாமல் போவதற்கான முதன்மையான காரணம் என்று கூறலாம். இதனை ஆங்கிலத்தில் erectile dysfunction அல்லது குறி விறைப்புத் தன்மை இல்லாமல் போதல் என்று கூறுகிறார்கள். இங்குவினல் ஹெர்னியா இருப்பதற்கும், குறி விறைப்புத் தன்மை இல்லாமல் போவதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. ஏனென்றால் குறி விரைப்புத்தன்மை அடைய தேவைப்படும் ரத்த ஓட்டத்தை ஹெர்னியா குறைபாடு கட்டுப்படுத்துவதில்லை. ஆகையால் இங்குவினல் ஹெர்னியா இருப்பதால் குறி விரைப்புத்தன்மை பாதிப்பு அடைவதில்லை.

ஒருக்கால் அறை பகுதியில் உள்ள ஹெர்னியா மிகவும் பெரிதாக இருக்கும் பட்சத்தில், ஆண் குறி அதனுள் புதைந்துவிடும் நிலை ஏற்படலாம். இந்த நிலையால் திருப்திகரமாக உடலுறவு கொள்ள முடியாமல் போகும் வாய்ப்பும், குறி விறைப்பு தன்மை அடைய தடை ஏற்படும் வாய்ப்பும் மிக அதிகம் என்பதை தெளிவு படுத்தவேண்டும். அதனால் சுருங்க சொல்வதென்றால், ஹெர்னியா சிறிதாக இருந்தால் உடலுறவு கொள்வது தடை படாது. ஆனால் ஹெர்னியா பெரிதாக இருந்தால் உடலுறவு கொள்ள தடையாக அது இருக்கும்.

இங்குவினல் ஹெர்னியா செக்ஸ் சம்பந்தமான பிரச்னைகளை அதிகம் தராது என்ற போதிலும், சில முன்னெச்சரிக்கைகளை நீங்கள் எடுத்துக்கொண்டால் நல்லதே. அதிக எடையை தூக்குவது, குனிந்து நிமிர்வது, மலச்சிக்கல் ஏற்படுத்தும் உணவுகளை உண்பது, அதிகமான உடல் எடையை அடைவது, போன்ற செயல்பாடுகளை தவிர்க்கவேண்டும். ஹெர்னியா இருந்தால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர் மாறன் கீழ்கண்ட காணொளியில் சில விவரங்களை கூறுகிறார்.

யோகா பயிற்சி செய்தால் ஹெர்னியா குணமாகிவிடும் என்ற தவறான புரிதல் சில பேரிடம் உள்ளது. யோகா பயிற்சி ஹெர்னியாவை அதிகமாக்கவும் செய்யலாம். சில ஆசனங்கள் இருக்கிற ஹெர்னியாவை மோசமாக்கி விடக்கூடிய வாய்ப்பு நிறையவே உண்டு. இதனை பற்றி விலாவாரியாக மருத்துவர் மாறன் நமக்கு இந்த காணொளியில் எடுத்துரைக்கிறார்.

இங்குவினல் ஹெர்னியா உள்ளபடி மலட்டுத்தன்மையை உண்டாக்குமா?

இங்குவினல் ஹெர்னியா எந்த நேரத்திலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்குவதில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியே ஆகவேண்டும். இருக்கின்ற ஹெர்னியா விரையை அழுத்தி விந்து உற்பத்தி செய்யும் உறுப்பை எந்த நிலையிலும் நோகடிப்பதில்லை. வாஸ் டெபரன்ஸ் (Vas Deferens) என்று சொல்லக்கொடிய விந்துநீர் குழாய்களை ஹெர்னியா எந்த நிலையிலும் பாதிப்பதில்லை. உண்மை இப்படி இருக்கும்போது இங்குவினல் ஹெர்னியா உள்ளபடி மலட்டுத்தன்மையை உண்டாக்குமா? இல்லை என்பதே சரியான பதில்.

ஆண்களுக்கு உள்ள ஹெர்னியாவும், மலட்டுத்தன்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், சில ஆண்களுக்கு ஏற்கனவே மலட்டுத்தன்மை இருந்து, அந்த ஆணுக்கு பின்னாளில் ஹெர்னியாவும் ஏற்பட்டால், அது ஹெர்னியாவால் உருவான மலட்டுத்தன்மை இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். அதை எதேச்சையான நிகழ்வு என்றே சொல்லவேண்டும்.

இங்குவினல் ஹெர்னியா / குடலிறக்க அறுவை சிகிச்சை செய்வதால் ஆண் குறி விறைக்கும் தன்மையை இழந்துவிடுமா?

இங்குவினல் ஹெர்னியா அறுவை சிகிச்சை ஆண்குறியின் விறைப்பு தன்மையை பாதிப்பதில்லை. இங்குவினல் ஹெர்னியா அறுவை சிகிச்சையில் ஹெர்னியா துளையை மெஷ் (Hernia Mesh) வைத்து மூடுவது மட்டுமே செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்யும்போது எந்த ரத்த நாளங்களும், நரம்புகளும் தொடப்படுவதே இல்லை. ஆதலால்  இங்குவினல் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்வதால் உடலுறவு கொள்ளுவது பாதிக்கப்படும் என்ற கூற்றில் உண்மையில்லை.

தற்காலத்தில் செய்யப்படும் லேபரோஸ்கோபி அறுவை சிகிச்சை முறைகள் ஹெர்னியா அறுவை சிகிச்சையை இன்னும் எளிமையாக்கிவிட்டன. இந்த அறுவை சிகிச்சை முறையில் வயிற்றின் மேல் பகுதியில் தான் துளைகள் இடப்படுகின்றன. விரைப்பைக்கு போகும் ரத்த நாளங்களும், நரம்புகளும் இந்த முறையில் தொடப்படுவதே இல்லை. அதனால் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் ஆண்களின் குறி விரைப்புத்தன்மை பாதிப்பு அடைவதேயில்லை.

இங்குவினல் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்வதால் மலட்டுத்தன்மைக்கு எப்படி ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவர் மாறன் கீழ்காணும் காணொளியில் விளக்குகிறார்.

குடலிறக்க அறுவை சிகிச்சை செய்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

பிழை இன்றி செயல்படும் விரைகள் கூட மலட்டுத்தன்மையை கொண்டிருக்கலாம். ஆண்களின் விந்துநீரில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை, அதன் இயங்கு தன்மை போன்றவையே குழந்தை பேறை தீர்மானிக்கிறது. அப்படியென்றால் ஒரு ஆண் தனது குறி சரியாக விறைத்து, உடலுறவு கொண்டும், ஹெர்னியா இருந்தாலோ, இல்லாமல் இருந்தாலோ, அவரின் விந்தணுக்களில் குறைபாடு இருக்குமேயானால், கண்டிப்பாக குழந்தை பேறு கிடைக்காது. ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடுகள் வர ஹார்மோன் குறைபாடுகள், மரபணுக்களில் பிரச்சனை, உடற்கூறு பிரச்ச்னைகள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இவைகளுக்கும் ஹெர்னியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளவேண்டும். அதனால் ஒரு ஆணுக்கு இங்குவினல் ஹெர்னியா இருந்து அறுவை சிகிச்சை நிபுணர் அவருக்கு அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தால், எந்த வித சந்தேகமும், தயக்கமும் இல்லாமல் அறுவை சிகிச்சையை செய்துக் கொள்ளலாம்.

மருத்துவர் மாறன் அவர்களின் கருத்து

மருத்துவர் மாறன் அவர்கள் பல ஆண்டுகளாக சென்னையில் ஹெர்னியா அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இது வரை ஒரு முறை கூட ஹெர்னியா அறுவை  சிகிச்சை செய்ததால் மலட்டுத்தன்மை பாதித்ததாக எந்த ஆணும் சொல்லவே இல்லை. ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்த பக்கத்தில் உள்ள விரை சிறிது சுருங்கினார்போல தோன்றுவது இயல்பான ஒன்றே என்று அவர் கூறுகிறார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Call Now