18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை பருமனானவர்களின் மலட்டுத்தன்மையை போக்குமா?

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை தங்களது மகப்பேறு பாக்கியத்தை சிதைத்து விடுமோ என்ற பயம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டு. ஒரு உண்மையை சொல்லவேண்டும் என்றால், பருமனாக இருப்பதே குழந்தை பெரும் தன்மை பாதிக்கும்.  பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்பதே இந்த மிக மோசமான பருமனுக்கு எதிரான போர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த போரானது பருமனான உடலை உடையவர்களின் மகப்பேறு பாக்கியத்தை பாதித்துவிடுமா?

மிக மோசமான பருமனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள்

  • செக்ஸ் வைத்துக்கொள்வதில் பொதுவாக ஆர்வம் குறைந்துவிடும். ஏனென்றால் அதீத பருமன் காரணமாக செக்ஸ் ஹார்மோன்கள் உரிய இடங்களுக்கு சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும்.
  • செக்ஸ் வைத்துக்கொள்வதே களைப்பை ஏற்படுத்தும் வேலையாக மாறி இருக்கும்.

மிக மோசமான பருமனால் ஆண்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட பிரச்சனைகள்

  • ஆண் குறியின் விறைப்பு தன்மை சீரில்லாத ரத்த ஓட்டத்தால் குறைந்துவிடுதல்.
  • மிக மோசமான பருமனால் பாதிக்கப்பட்ட சில ஆண்களுக்கு, பெண்களில் காணப்படும் செக்ஸ் ஹார்மோன்கள் சிறிது அதிகப்படியாக இருக்க வாய்ப்பு இருத்தல்.

மிக மோசமான பருமனால் பெண்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட பிரச்சனைகள்

  • சீரில்லாத மாதவிடாய்.
  • ஹார்மோன்கள் மாற்றம் அடைவதால் பெண்கள் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைந்து போதல், கருமுட்டை உருவாவதிலேயே பிரச்சனை இருத்தல், ஆண்களின் விந்தணுவை ஒழுங்காக வாங்கும் தன்மையை உடல் பொதுவாகவே இழந்துவிடுதல்.
  • பெண்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சிகளை மேற்கொண்டாலும் அதன் வெளிப்பாடு திருப்திகரமாக இல்லாமல் போதல்.
  • PCOD என்று கூறப்படும் சினைப்பை கட்டிகள் உருவாதல்.

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்

  • குறைந்த போன எடை காரணமாக ஆண்கள் திரும்ப செக்ஸ் வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுதல்.
  • ஆண்களுக்கான செக்ஸ் ஹார்மோன்கள் சரியான அளவில் உற்பத்தியாகி அதனால் செக்ஸ்சில் ஆர்வம் ஏற்படுதல்.

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்

  • பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையால் விளையும் மிகப்பெரிய வெற்றியே மாதவிடாய் சீராக நடத்தல்.
  • PCOD என்று கூறப்படும் சினைப்பை கட்டிகள் உள்ள பெண்களுக்கு கூட கருவுறும் தன்மை அதிகமாதல்.
  • பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பெண்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சிகளை மேற்கொள்ளும்போது அவர்களது முயற்சி அதிகமாக வெற்றியில் முடிவடைதல்.

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட ஒரு ஆண்டில், எடை குறைப்பு பொதுவாக சீரான நிலையை அடைந்திருக்கும். ஆகவே பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பெண்கள் ஒரு வருடத்திற்கு பிறகு கருவுற பரிந்துரைக்கப் படுகிறார்கள்.

Call Now